Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் BMW, CI, TVS, Hudson Motor உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்தல், புதிய தொழிற்சாலைகள் அமைத்தல், மின்சார வாகனங்கள் (EV) உற்பத்தியை அதிகரித்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழகத்தில் கார் உற்பத்தித் துறையை மேலும் விரிவுபடுத்துதல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஒவ்வொரு நிறுவனத்தின் சார்பிலும் தொழிற்சாலைகளின் கட்டமைப்பு, உற்பத்தி திறன், தயாரிக்கப்படும் கார்கள் மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து காணொளி விளக்கங்கள் மூலம் முதலமைச்சர் விஜய்க்கு விளக்கமளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ