Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள, 36 பேர் கொண்ட சிறப்பு குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இந்த குழுவினருடன் நாளை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, கள ஆய்வை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து, வரும்
18-ம் தேதி முதல் குழுவினர் தமிழகம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
தேர்தலில் திமுக எதிர்கொண்ட பின்னடைவு, வாக்கு சரிவு, உள்ளக பிரச்சினைகள், கூட்டணி நிலை, மக்கள் அதிருப்தி உள்ளிட்ட காரணிகளை ஆய்வு செய்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
இந்த 36 பேர் கொண்ட குழுவினர் தங்களது ஆய்வு அறிக்கையை ஜூன் 5-ம் தேதிக்குள் கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ