நள்ளிரவில் மசாலா வியாபாரி சுட்டுக்கொலை - பாட்னா போலீஸார் தீவிர விசாரணை
பாட்னா, 15 மே (ஹி.ச) பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டிருந்த நேரத்தில் உள்ளூர் மசாலா வியாபாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இன்று போலீஸார் உறுதி செய்தனர். உயிரிழந்தவர் பிண்டு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ள
Masala Vendor Shot Dead at Midnight


பாட்னா, 15 மே (ஹி.ச)

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டிருந்த நேரத்தில் உள்ளூர் மசாலா வியாபாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இன்று போலீஸார் உறுதி செய்தனர்.

உயிரிழந்தவர் பிண்டு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜ் கிஷோர் சிங் கூறுகையில்,

மசாலா கடை வைத்திருந்த பிண்டு குமார் என்பவர் மின்தடையின்போது சுடப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரை எத்தனை குண்டுகள் தாக்கின என்பது பிரேத பரிசோதனைக்குப் பிறகே உறுதியாகும். தகவல்களின்படி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

என்று அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கின.

பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

கொலைக்கான சூழ்நிலைகளை மதிப்பிடவும், தடயங்களைச் சேகரிக்கவும் தடயவியல் குழுக்களும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன.

விரைவில் இச்சமயம் குறித்த மேலதிக விவரங்கள் காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Hindusthan Samachar / vidya.b