Enter your Email Address to subscribe to our newsletters

பதர்வா, 15 மே (ஹி.ச)
இந்திய ராணுவத்தின் 4-வது ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவு, இன்று ஜம்மு-காஷ்மீர் பதர்வா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லால் டெட் அரங்கில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவை நடத்தியது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் நோக்கங்கள், திட்டமிடல் மற்றும் செயல்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சியின் போது, கர்னல் யோகேஷ் சவுகான் ஆபரேஷன் எவ்வாறு நடத்தப்பட்டது மற்றும் அமைதி, பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இந்திய ராணுவத்தின் பங்கு குறித்து விரிவாக விளக்கினார்.
காணொளி விளக்கக்காட்சிகள் மூலம், நடவடிக்கையின் பல்வேறு கட்டங்களை எடுத்துரைத்த கர்னல் சவுகான், அதில் வெளிப்பட்ட வீரம், ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடல் உத்திகளை எடுத்துக் கூறினார்.
இளைஞர்களிடையே தேசிய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், நாட்டுக்கு சேவை செய்ய அவர்களை ஊக்குவிப்பதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.
இந்த முயற்சியைப் பாராட்டிய பதர்வா வளாக ரெக்டர் பேராசிரியர் ராகுல் குப்தா கூறுகையில்,
இதுபோன்ற நிகழ்ச்சிகள், ஆயுதப் படைகளின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மாணவர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன. ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மாணவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களின் தேசிய பொறுப்புணர்வையும் வலுப்படுத்துகிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துரையாடல் மற்றும் கேள்வி-பதில் அமர்வு நடைபெற்றது.
தகவல் நிறைந்த, ஊக்கமளிக்கும் சொற்பொழிவை வழங்கிய ராணுவ அதிகாரிகளுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b