Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற தொழில்துறை ஆலோசனைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனையின் போது, திட்டத்தில் தற்போது எந்த நிலையில் பணிகள் உள்ளனவோ அந்த நிலையே தொடர வேண்டும் என்றும், அதற்கு மேலாக புதிய பணிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக விரைவில் தனியாக ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் திட்டத்தின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த ஆலோசனை அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ