எரிபொருள் சேமிப்பு இயக்கத்திற்கு ஆதரவு - சத்தீஸ்கர் முதல்வர் தனது வாகன அணிவகுப்பை குறைத்து நடவடிக்கை
சத்தீஸ்கர், 16 மே (ஹி.ச) மேற்காசிய நெருக்கடி காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கன நடவடிக்கை அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில், சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் தனது அதிகாரப்பூர்வ வாகன அணிவகுப்
Chhattisgarh


சத்தீஸ்கர், 16 மே (ஹி.ச)

மேற்காசிய நெருக்கடி காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கன நடவடிக்கை அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில், சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் தனது அதிகாரப்பூர்வ வாகன அணிவகுப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார்.

இது குறித்து மாநில மக்களுக்கு இன்று அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

நமது பிரதமரின் அழைப்புக்கு பதிலளித்து, நாங்கள் தானாக முன்வந்து எங்கள் அதிகாரப்பூர்வ வாகன அணிவகுப்புகளில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளோம். எங்கள் அமைச்சர்களும் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர்

டீசல் மற்றும் பெட்ரோல் நுகர்வைக் குறைப்பதற்கு, தங்கள் சொந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யுமாறு அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தற்போதைய சூழலில் இதுவே மிகவும் நடைமுறைக்கு உகந்த அணுகுமுறை

பிரதமரின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை தெரிவித்த அவர், “கோவிட்-19 பெருந்தொற்றின் சவால்களில் இருந்து 140 கோடி இந்தியர்களை வெற்றிகரமாக வழிநடத்திய நமது பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த சூழ்நிலையையும் நாம் கடந்து வருவோம் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய மோதலின் பின்னணியில், இறக்குமதி எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பொருளாதார சாத்தியக்கூறுகளை மேம்படுத்துமாறு பிரதமர் மோடி குடிமக்களுக்கு விடுத்த ஏழு வேண்டுகோள்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா மற்றும் முதலமைச்சர்கள் ரேகா குப்தா, யோகி ஆதித்யநாத், மோகன் யாதவ், பஜன்லால் ஷர்மா, தேவேந்திர ஃபட்னாவிஸ், சுக்விந்தர் சிங் சுகு ஆகியோரும் தங்கள் வாகன அணிவகுப்புகளின் அளவைக் குறைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b