முதலமைச்சர் வாகன அணிவகுப்பு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க சிறப்பு ஏற்பாடு
சென்னை, 16 மே (ஹி.ச) சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தினமும் சுமார் 17 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறார். பெரும்பாலும் காலை அலுவலக நேர நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையில் முதலமைச்சர் தலைம
Cm


சென்னை, 16 மே (ஹி.ச)

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தினமும் சுமார் 17 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறார்.

பெரும்பாலும் காலை அலுவலக நேர நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையில் முதலமைச்சர் தலைமைச் செயலகம் வருவதால், வாகன அணிவகுப்பு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகுவதாகவும் சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, அவரது வாகன அணிவகுப்பு செல்லும் பாதை முழுவதும் போக்குவரத்து சீராக நடைபெறவும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும் காவல்துறை சார்பில் சிறப்பு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்தை முழுமையாக நிறுத்தாமல் குறுகிய நேரத்திற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதுடன், மாற்றுப்பாதைகள் மூலமாக வாகனங்கள் திருப்பி விடப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ