Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச)
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று (மே 16) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் இயக்குநர் மாரி செல்வராஜ் சந்தித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
கூறியிருப்பதாவது,
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன்.
சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன் எனக் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b