குறைந்த முதலீட்டில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் வாத்து வளர்ப்பு
காஞ்சிபுரம், 16 மே (ஹி.ச.) வாத்து வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில், குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சிறந்த கால்நடை வளர்ப்புத் தொழிலாகும். கோழி வளர்ப்பை விட வாத்துகளுக்கு நோய் எதிர்ப்புத் சக்தி அதிகம் என்பதால், விளிம்புநிலை வி
Duck Rearing: A Helping Hand for Farmers


காஞ்சிபுரம், 16 மே (ஹி.ச.)

வாத்து வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில், குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சிறந்த கால்நடை வளர்ப்புத் தொழிலாகும். கோழி வளர்ப்பை விட வாத்துகளுக்கு நோய் எதிர்ப்புத் சக்தி அதிகம் என்பதால், விளிம்புநிலை விவசாயிகளுக்கும் இது ஒரு சிறந்த வருமான வாய்ப்பாக அமைகிறது.

கோழிகளைப் போல வாத்துகளுக்கு அதிநவீன கொட்டகைகளோ அல்லது விலையுயர்ந்த தீவனங்களோ தேவையில்லை. கோழிகளை விட வாத்துகள் அதிக வருடங்களுக்கு

(சுமார் 2-3 ஆண்டுகள்) முட்டையிடும் திறன் கொண்டவை.

நெல் வயல்களிலும், மீன் பண்ணைகளிலும் வாத்துகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம் இரட்டிப்பு லாபம் பெறலாம்.

இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்டவை. பறவைக் காய்ச்சல், வெள்ளைக்கழிச்சல் போன்ற பெரிய நோய்த்தாக்கங்கள் வாத்துகளுக்குக் மிகக் குறைவு.

மேய்ச்சல் முறையில் வளர்க்கும்போது நத்தைகள், பூச்சிகள், வயல் கழிவுகள், மற்றும் பாசிகளை உண்பதால் தீவனச் செலவு 70% வரை குறைகிறது.

வாத்துக்கள் தொடர்ந்து 2 முதல் 3 ஆண்டுகள் வரை நல்ல முறையில் முட்டையிடும் (வருடத்திற்குச் சுமார் 280-300 முட்டைகள்). முட்டையின் எடையும், சத்துக்களும் அதிகம்.

வாத்துகளுக்கு தீவனம் அளிப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:

மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று, வாத்து வளர்ப்பது மற்றும் நீர்நிலைகளை அமைத்து வாத்து வளர்ப்பது என, இரு விதமாக வாத்து வளர்ப்பு உள்ளது.

பண்ணைகள் அமைத்து வாத்துகள் வளர்க்கும் முறை கடைபிடிப்பது விவசாயிகள் இடையே குறைவு தான். கோழிகளுக்கு பண்ணைகள் இருப்பது போல, வாத்துகளுக்கு பண்ணைகள் அமைத்து, வாத்து வளர்ப்பில் ஈடுபடலாம்.

குறிப்பாக, பரண் மீது ஆடு, கோழி வளர்க்கும் போது, அதன் அடிப்பகுதிகளில் பண்ணை குட்டைகள் அமைத்து, வாத்து வளர்ப்பில் ஈடுபடலாம்.

இதுதவிர, பண்ணை குட்டைகளில் அசோலா தீவனம் வளர்த்து, வாத்துகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.

ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வழங்குவதை போல இல்லாமல், வாத்து அலகு என, அழைக்கப்படும் வாய் மூழ்கும் அளவிற்குதீவனத்தை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.

அப்போதுதான், தண்ணீருடன் தீவனத்தையும்சாப்பிடும். அதற்குகேற்ப, கட்டமைப்புகளை வாத்து வளர்ப்பு பண்ணை விவசாயிகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இதன் வாயிலாக, வாத்து வளர்ப்பில் வளமான வருவாய் பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b