இன்று சிக்கிம் 50-வது மாநில தினம் - பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, 16 மே (ஹி.ச.) சிக்கிம் மாநில தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று கொண்டாடப்படுகிறது. 1975 மே 16 அன்று, மக்கள் வாக்கெடுப்பைத் தொடர்ந்து முடியாட்சி ஒழிக்கப்பட்டு, முன்னாள் இமயமலை ராஜ்ஜியமான சிக்கிம் இந்தியாவின் 22-வது மாநிலமாக இணைந்தது
இன்று சிக்கிம் 50-வது மாநில தினம் - பிரதமர் மோடி வாழ்த்து


புதுடெல்லி, 16 மே (ஹி.ச.)

சிக்கிம் மாநில தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று கொண்டாடப்படுகிறது.

1975 மே 16 அன்று, மக்கள் வாக்கெடுப்பைத் தொடர்ந்து முடியாட்சி ஒழிக்கப்பட்டு, முன்னாள் இமயமலை ராஜ்ஜியமான சிக்கிம் இந்தியாவின் 22-வது மாநிலமாக இணைந்தது.

இதற்கு முன், நாம்கியால் வம்சத்தினர் சிக்கிமை ஆட்சி செய்தனர். பின்னர் 1950-ம் ஆண்டு இந்தோ-சிக்கிம் ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பாதுகாப்பு அரசாக இருந்தது. 1975 ஏப்ரலில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 97 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முடியாட்சியை ஒழித்து இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, 36-வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 1975 மே 16 அன்று சிக்கிமுக்கு முறையாக மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சிக்கிம் மாநிலத்தின் 50-வது மாநில தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இன்று அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

எனது சகோதர, சகோதரிகளுக்கு மாநில தின வாழ்த்துகள். இந்தியாவின் வளர்ச்சியில் சிக்கிமின் பங்களிப்பு மிகவும் மதிப்புமிக்கது. மாநில மக்கள் நல்ல உடல்நலத்துடனும், செழிப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.

சிக்கிம் தனது 50-வது மாநில தின விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் இந்த நாள் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சிக்கிமுக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், “சில நாட்களுக்கு முன்பு, கொண்டாட்டங்களுக்காக சிக்கிம் மக்களுடன் இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

சிக்கிமில் நான் பெற்ற அன்பும், அரவணைப்பும் என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். வரும் காலங்களிலும் சிக்கிமின் வளர்ச்சிப் பயணத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்

என பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b