Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககம் சார்பில் நடைபெறும் இந்த சேர்க்கைக்கு, மாணவர்கள் skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் வரும் ஜூன் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சில குறிப்பிட்ட தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியும் போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம், ஃபிட்டர், வெல்டர், மெக்கானிக், டீசல் மெக்கானிக், COPA, டர்னர் உள்ளிட்ட பல தொழிற்பயிற்சி பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது.
மாணவர் சேர்க்கை முழுவதும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்றும், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் கலந்தாய்வு மூலம் இடஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9499055612, 9499055642 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam