அமைச்சரவை விரிவாக்கம் படிப்படியாக நடக்கும் -அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
கோவை, 17 மே (ஹி.ச.) அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தனது சொந்த தொகுதியில் இருந்து சென்னைக்கு புறப்படுவதற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த
செங்கோ


கோவை, 17 மே (ஹி.ச.)

அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தனது சொந்த தொகுதியில் இருந்து சென்னைக்கு புறப்படுவதற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர்,

அதிமுக MLA-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று யாரும் கூறவில்லை. இது தொடர்பாக எந்தவித தகவலும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுக உள்கட்சி நிலவரம் குறித்து பேசிய அவர்,

அதிமுகவில் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து,மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட அதிமுக, தற்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் வலுவிழந்துள்ளது என்று விமர்சனம் செய்தார்.

மேலும், தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

அமைச்சரவை விரிவாக்கம் ஒரே நேரத்தில் நடைபெறாது; அது படிப்படியாக நடைபெறும். ஆட்சிக்கு எதிராக எத்தனை சவால்கள், சோதனைகள் வந்தாலும் முதலமைச்சர் விஜய் அவற்றை திறம்பட சமாளிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P