பீகாரில் பயணிகள் ரயிலில் தீ விபத்து- பயணிகள் மத்தியில் பரபரப்பு
பீகார், 18 மே (ஹி.ச.) பீகார் மாநிலம் சசாரம் சந்திப்பு ரயில் நிலையம் அருகே சசாரம்–பாட்னா பயணிகள் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இன்று காலை சுமார் 6 மணி
தீ


பீகார், 18 மே (ஹி.ச.)

பீகார் மாநிலம் சசாரம் சந்திப்பு ரயில் நிலையம் அருகே சசாரம்–பாட்னா பயணிகள் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இன்று காலை சுமார் 6 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு (ஷார்ட் சர்க்யூட்) காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ரயில் சந்திப்பு பகுதியை அடைந்த சில நிமிடங்களில், ஒரு பெட்டியிலிருந்து புகை வெளியேறுவது காணப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசரமாக வெளியேற முயன்றனர்.

தகவலறிந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P