மண்ணின் மைந்தர் ஹெச்.டி.தேவ கௌடா பிறந்த தினம் இன்று...!
தமிழ்நாடு, 18 மே (ஹி.ச.) இன்று (2026 மே 18) இந்தியாவின் 11-வது பிரதமரான ஹெச்.டி.தேவ கௌடா அவரது 93-வது பிறந்தநாளாகும். ஹெச்.டி.தேவ கௌடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா 1933ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மைசூரில் பிறந்தார். இவர் இ
க


தமிழ்நாடு, 18 மே (ஹி.ச.)

இன்று (2026 மே 18) இந்தியாவின் 11-வது பிரதமரான ஹெச்.டி.தேவ கௌடா அவரது 93-வது பிறந்தநாளாகும்.

ஹெச்.டி.தேவ கௌடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா 1933ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

இவர் இந்தியக் குடியரசின் பிரதமராகவும், கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.

1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1980ஆம் ஆண்டு அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார்.

1999ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கினார்.

அரசியல் பயணம் முதலமைச்சர்:

1994 முதல் 1996 வரை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

பிரதமர்: 1996 ஜூன் 1 முதல் 1997 ஏப்ரல் 21 வரை இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பு வகித்தார்.

மண்ணின் மைந்தர்:

விவசாயிகளின் நலனுக்காகப் பாடுபட்டதால்

மண்ணின் மைந்தர்

(Son of the Soil) என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

Hindusthan Samachar / Durai.J