சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு - “இது என் வீடு” என உருக்கம்
சென்னை, 18 மே (ஹி.ச.) சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு வீரர்களுக்கான வசதிகள், தங்கும் விடுதி பராமரிப்பு, கட்டுமான பணிகள
ஆதவ்


சென்னை, 18 மே (ஹி.ச.)

சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விளையாட்டு வீரர்களுக்கான வசதிகள், தங்கும் விடுதி பராமரிப்பு, கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,

நான் வெறும் விளையாட்டுத்துறை அமைச்சராக மட்டும் இங்கு வரவில்லை.

இதே இடத்தில் ஹாஸ்டல் மாணவராக தங்கி, விளையாட்டு வீரராக வளர்ந்தவன். அதனால் இந்த இடம் எனக்கு அலுவலகம் அல்ல, என் வீடு போன்றது என்று தெரிவித்தார்.

மேலும், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரம், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் தேவைகள், பயிற்சி வசதிகள் உள்ளிட்ட விவரங்களை நேரடியாக கேட்டு அறிந்தார்.

நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார்.

விளையாட்டு வீரர்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும், தரமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P