காற்றாலை கோபுரம் தயாரிக்கும் கம்பெனி வெல்டர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
தஞ்சாவூர், 18 மே (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் சரண்ராஜ் (29) இவர் துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் காற்றாலைகோபுரம் தயாரிக்கும் கம்பெனியின் வெல்டராக கடந்த இரண்டு வர
Death


தஞ்சாவூர், 18 மே (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் சரண்ராஜ் (29) இவர் துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் காற்றாலைகோபுரம் தயாரிக்கும் கம்பெனியின் வெல்டராக கடந்த இரண்டு வருடமாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு காற்றாலை கோபுரத்திற்கு வெல்டிங் அடிக்கும் பொழுது எதிர் பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக அங்கு வேலை பார்த்த சக தொழிலாளர்கள் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சரண்ராஜின் உடலை மீட்டுள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரண்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN