Enter your Email Address to subscribe to our newsletters

பீகார், 19 மே ( ஹி.ச)
இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்வை சந்தித்துள்ளன. சராசரியாக லிட்டருக்கு 90 பைசா அதிகரித்துள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை 87 பைசா உயர்ந்து, ரூ.97.77-லிருந்து ரூ.98.64 ஆகவும், டீசல் விலை 91 பைசா உயர்ந்து, ரூ.90.67-லிருந்து ரூ.91.58 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பீகார் அமைச்சர் ராம் கிருபால் யாதவ் கூறியதாவது,
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தைகள் கடுமையான பாதிப்பை சந்திப்பதால், எரிசக்தி நெருக்கடி இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளது
பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாத அவசியம். நாடு ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, உண்மையில், உலகமே நெருக்கடியில் உள்ளது. வளைகுடா பகுதிகளில் தொடரும் போர், தணியும் அறிகுறியே இல்லாத நிலையில், எண்ணெய் விலைகள் உயர்வது இயல்பானதே. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெளிவான கருத்துகளை பதிவு செய்திருந்தார்.
கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை திறம்பட முறியடித்துள்ளன.
கடந்த ஆண்டுகளில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நக்சலிசத்தை ஒழிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கூட்டு முயற்சியால், இன்று நாடு முழுவதும் நக்சலிசம் இல்லாத நாடாக மாறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூற முடியும்.
இவ்வாறு அமைச்சர் ராம் கிருபால் யாதவ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b