Enter your Email Address to subscribe to our newsletters

ஓசூர், 19 மே (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலின் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கெலமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 11 கிராம மக்களின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், பாரம்பரிய முறைப்படி தேர் ஊர்வலம் நடத்தப்பட்டது. கெலமங்கலம், ஜுபி, தொட்டேகாணப்பள்ளி, செட்டிபள்ளி, குந்துமாரணப்பள்ளி, ஜக்கேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து அம்மனை வழிபட்டனர்.
திருவிழாவையொட்டி, அம்மனுக்கு நேர்த்திக்கடனாக 50-க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்கள் வெட்டி படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது.
இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர். இதனால் கெலமங்கலம் பகுதி விழாக்கோலம் பூண்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P