Enter your Email Address to subscribe to our newsletters

இம்பால் , 19 மே ( ஹி.ச.)
மணிப்பூர் மாநிலத்தில் 2023ஆம் ஆண்டு இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடுமையான வன்முறையாக மாறியது.
இதனைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பின்னர் ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதனிடையே, மாநிலத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு இம்பால், டென்கினொபல், தவ்பெல் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA