Enter your Email Address to subscribe to our newsletters

ஒடிசா, 19 மே (ஹி.ச.)
ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல வேளாண் மாநாடு, இன்று
( மே 19) ஒடிசாவின் புவனேஷ்வரில் நடைபெறுகிறது.
இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை ஒன்றிணைக்கிறது.
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி ஆகியோர் இணைந்து இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குகின்றனர்.
இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்க புவனேஷ்வர் வருகை தந்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பூரி ஜெகந்நாதர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்.பி. சம்பித் பத்ராவுடன் சென்றிருந்த சௌகான், ஜெகந்நாதர் மற்றும் உடன் தெய்வங்களிடம் ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் கூறுகையில்,
அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருக்க வேண்டும் என பிரார்த்தித்தேன். உலகெங்கும் நடைபெற்று வரும் மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும் எனவும் வேண்டினேன்.
இன்று நடைபெறும் ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள் பங்கேற்கும் பிராந்திய வேளாண் மாநாடு, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் மத்திய, மாநில அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b