ஜெஹானாபாத் கொலை வழக்கு - போலீஸ் என்கவுன்டரில் முக்கிய குற்றவாளி படுகாயம்
ஜெஹானாபாத், 22 மே (ஹி.ச.) பீகார் மாநிலம் ஜெஹானாபாத் மாவட்டம் பெலாவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெத்சைய்யா அருகே மே 18ஆம் தேதி இரவு தீபக் ஷர்மா சுட்டுக் கொல்லப்பட்டார். மே 19ஆம் தேதி பிலாவத் காவல் நிலைய எல்லையில் கொலை தொடர்பான தகவல் கிடைத்
Jehanabad Murder Case


ஜெஹானாபாத், 22 மே (ஹி.ச.)

பீகார் மாநிலம் ஜெஹானாபாத் மாவட்டம் பெலாவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெத்சைய்யா அருகே மே 18ஆம் தேதி இரவு தீபக் ஷர்மா சுட்டுக் கொல்லப்பட்டார்.

மே 19ஆம் தேதி பிலாவத் காவல் நிலைய எல்லையில் கொலை தொடர்பான தகவல் கிடைத்ததாக காவல் கண்காணிப்பாளர் அபராஜித் லோஹன் தெரிவித்தார்.

இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ‘ராவணன்’ என்றழைக்கப்படும் விக்கு சிங், நேற்று (மே 21ஆம் தேதி) கூடுதல் எஸ்.பி தலைமையகம் மற்றும் எஸ்.டி.பி.ஓ சதர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின் தீவிர விசாரணையில், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை கோசி காவல் நிலைய எல்லையில் உள்ள கால்வாய் அருகே மறைத்து வைத்திருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு ஆயுதத்தை மீட்க கோசி காவல் நிலையக் குழுவுடன் அவரை அழைத்துச் சென்றபோது, இரண்டு மூன்று இடங்களுக்கு போலீசாரை அழைத்துச் சென்று திசை திருப்பியுள்ளார்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்க போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர் துப்பாக்கியால் சுட்டதாக ஜெஹானாபாத் போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் விக்கு சிங் படு காயமடைந்தார்.

தற்போது விக்கு சிங் ஜெஹானாபாத் சதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b