Enter your Email Address to subscribe to our newsletters

ஹர்தோய், 22 மே (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள நவீன் பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் குறைந்தது 8 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலாகின.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது குறித்து,தீயணைப்பு அதிகாரி சிவ்ராம் யாதவ் கூறுகையில்,
நவீன் சப்ஜி மண்டிக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.
முதலில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் தீயின் தீவிரத்தைக் கண்டு மேலும் ஒரு வாகனத்தை வரவழைத்தோம். மொத்தம் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தோம்.
தீயணைப்பு பணியின்போது என் கண்முன்னே இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இதற்கு முன்பும் வெடிப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆபத்தை உணர்ந்து நான்கு சிலிண்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினோம்.
தீயணைப்பு வீரர்களின் துணிச்சல் மற்றும் சமயோசித செயல்பாட்டால் பெரும் உயிர் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆறுக்கும் மேற்பட்ட கடைகள் இந்த தீயில் சேதமடைந்துள்ளன.
என்று தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் வாடிக்கையாளர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் கூறுகையில், அந்தப் பகுதியில் மூன்று இனிப்புக் கடைகள் உட்பட மொத்தம் ஐந்து கடைகள் உள்ளன என்று குறிப்பிட்டார். எனினும், தீயணைப்புத் துறையின் அதிகாரப்பூர்வ தகவல்படி எட்டு கடைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.
சேத மதிப்பு மற்றும் விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b