Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 22 மே (ஹி.ச.)
உலக பல்லுயிர் பெருக்க தினம் என்பது இயற்கைக்கும், மனித வாழ்விற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உலகில் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு.
பூமியில் காணப்படும் அனைத்து தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களின் வகை மற்றும் பன்முகத்தன்மையைக் குறிப்பது தான் பல்லுயிர் பெருக்கம்.
பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமையாகும். உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
நோக்கம்:
பூமியில் உள்ள பல்வேறு வகையான உயிரினங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றைப் பாதுகாக்கவும் ஒரு முக்கியமான தினமாகும்.
முக்கியத்துவம்:
இது சுத்தமான காற்று மற்றும் தண்ணீரை வழங்குகிறது.
உணவு மற்றும் மருந்துகளை வழங்குகிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுகிறது.
மண் வளத்தை மேம்படுத்துகிறது.
பூமியை மிகவும் அழகான இடமாக மாற்றுகிறது.
Hindusthan Samachar / Durai.J