பா.ஜனதா அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம்
சென்னை, 23 மே (ஹி.ச.) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறை சார்பில் மத்திய பா.ஜனதா அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று (23-ந் தேதி) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை எழும்பூர
பா.ஜனதா அரசைக்  கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம்


சென்னை, 23 மே (ஹி.ச.)

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறை சார்பில் மத்திய பா.ஜனதா அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று (23-ந் தேதி) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெறுகிறது.

அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா மாநிலங்களின் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் ஏ.செல்லக்குமார் காலை 9.30 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை 4 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர்

(ஊடக பொறுப்பாளர்) ஆ.கோபண்ணா அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b