Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 23 மே (ஹி.ச.)
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கம் அளித்தனர். ஹெட் 26 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார்.
பின்னர் இஷான் கிஷன் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் ஜோடி இணைந்து பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தது. கிஷன் அரைசதம் அடித்ததுடன், கிளாசன் 24 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.
இறுதியில் நிதிஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது.
256 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி 15 ரன்களில் அவுட்டானார். தேவ்தத் படிக்கல் 21 ரன்களில் வெளியேறினார். வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ரஜத் படிதார் 56 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
க்ருணால் பாண்டியா 41 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், ஐதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றது. இருப்பினும், நெட் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி 3-வது இடத்தில் நீடிக்கிறது.
பெங்களூரு அணி முதலிடத்திலும், குஜராத் அணி 2-வது இடத்திலும் உள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA