Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 மே (ஹி.ச.)
நாடு முழுவதும் பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த முறை தேர்வு செய்யப்பட்டுள்ள 51,000 பேரும் ரயில்வே, அஞ்சல் துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த்துறை, உயர்கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு 'கர்மயோகி பிராரம்ப்' என்ற இணையவழி பயிற்சி திட்டத்தின் மூலம் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். இது அரசு பணிகளில் திறம்பட செயல்பட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தனது உரையில், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மற்றும் அரசு பணிகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஜ்கர் மேளா தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b