Enter your Email Address to subscribe to our newsletters

மணிப்பூர், 24 மே (ஹி.ச.)
மணிப்பூர் காவல்துறையினருக்கு தேசிய நெடுஞ்சாலை 102-ல் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக கிடைத்த குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் இன்று காலை பல்லேல் சந்தேல் லம்காவில் நடத்திய சோதனையில், 189.05 கிலோ ஓபியம் விதைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட தெங்னோபால் மாவட்டம் தம்னாபோக்பி பகுதியைச் சேர்ந்த 34 வயதான தோலுங் கோஷெல் லம்காங் என்பவரை கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூரில் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைமை இயல்பாக உள்ளது. மலை மற்றும் சமவெளி மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு பணியமர்த்தல், பகுதி ஆதிக்க பயிற்சிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் கடுமையான கண்காணிப்பு ஆகியவற்றால் இது போன்ற கடத்தல் சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றச் செயல்கள் மற்றும் மிரட்டி பணம் பறிப்பதை மேலும் கட்டுப்படுத்த, பாதுகாப்புப் படையினர் பாதிக்கப்படக்கூடிய விளிம்பு பகுதிகளில் உளவுத்துறை அடிப்படையிலான விரிவான சோதனை, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரப்படுகிறது.
கடத்தல்காரர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 114 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 37 வழியாக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற 316 வாகனங்களுக்கு பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தனர். பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு வாகன அணிகள் தீவிரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
போலியான மற்றும் ஆதாரமற்ற உள்ளடக்கத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றினாலோ அல்லது பரப்பினாலோ கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு டிஜிட்டல் உள்ளடக்கத்தையும் பகிர்வதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை 9233522822 என்ற மத்திய கட்டுப்பாட்டு அறை எண்ணில் தொடர்பு கொண்டு சரிபார்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் அவற்றை உடனடியாக காவல்துறையிடமோ அல்லது அருகிலுள்ள பாதுகாப்புப் படையினரிடமோ ஒப்படைக்க வேண்டும் என்று காவல் கட்டுப்பாட்டு அறை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b