பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு லக்னோ சந்தைகளில் ஆடுகளின் விலை உயர்வு
லக்னோ, 25 மே (ஹி.ச.) பக்ரீத் என பெருவாரியாக அறியப்படும் இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ஈத்-உல்-அழா, இஸ்லாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் யாத்திரையின் நிறைவை இப
Goat prices rise in Lucknow markets ahead of Bakrid


லக்னோ, 25 மே (ஹி.ச.)

பக்ரீத் என பெருவாரியாக அறியப்படும் இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ஈத்-உல்-அழா, இஸ்லாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் யாத்திரையின் நிறைவை இப்பண்டிகை குறிக்கிறது.

மகிழ்ச்சி மற்றும் அமைதியின் அடையாளமாக விளங்கும் இந்த பண்டிகையின்போது குடும்பங்கள் ஒன்றுகூடி, கடந்தகால மனக்கசப்புகளை மறந்து, அர்த்தமுள்ள உறவுகளை வளர்க்கின்றன.

இறைவனுக்காக தனது அனைத்தையும் தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை இந்தப் பண்டிகை நினைவு கூர்கிறது.

ஈத்-உல்-அழா பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆட்டுச் சந்தைகளில் வாடிக்கையாளர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் கால்நடைச் சந்தைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பண்டிகை நெருங்குவதால் ஆடுகளுக்கான தேவை பெருமளவில் உயர்ந்துள்ளதாக பல வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அனைத்து வகை ஆடுகளின் விலையும் உயர்ந்துள்ளது.

விலை உயர்வு இருந்தபோதிலும், உயர் ரக மற்றும் நல்ல இன ஆடுகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து அதிக வரவேற்பு இருப்பதாக வியாபாரிகள் குறிப்பிட்டனர்.

ஈத்-உல்-அழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அதிகாலை முதல் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் சந்தைகளுக்கு வருகை தந்து, விலைகளை ஒப்பிட்டு, பேரம் பேசி வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆண்டு சந்தை விலைகள் அதிகரித்துள்ளதால், தங்கள் பட்ஜெட்டை மாற்றியமைக்க வேண்டியுள்ளதாக பலர் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b