Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 26 மே (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாளவாடி அருகே உள்ள கரளவாடி பிரிவைச் சேர்ந்தவர் சித்துராஜ் (45). விவசாயியான இவர், அப்பகுதியில் ஏற்பட்ட மின் தடையை சரிசெய்ய டிரான்ஸ்பார்மரில் பீஸ் போட முயன்றதாக கூறப்படுகிறது.
இதற்காக ஏணி வைத்து டிரான்ஸ்பார்மரில் ஏறிய போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சித்துராஜ் தூக்கி வீசப்பட்டு மயங்கினார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே சித்துராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சித்துராஜுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN