கச்சத்தீவு குறித்த கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ சொன்ன மீன்வளத்துறை அமைச்சர் ஶ்ரீநாத்
சென்னை, 26 மே (ஹி.ச.) சென்னை திருவான்மியூர் குப்பம் பகுதியில் மீனவ மக்களை சந்தித்த பின் வெளியே வந்த அமைச்சர் ஸ்ரீநாத்திடம், கச்சத்தீவு மீட்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆங்கிலத்தில் பலமுறை ‘நோ கமெண்ட்ஸ்’ (No Comments) என்று பதில் க
Minister Srinath


சென்னை, 26 மே (ஹி.ச.)

சென்னை திருவான்மியூர் குப்பம் பகுதியில் மீனவ மக்களை சந்தித்த பின் வெளியே வந்த அமைச்சர் ஸ்ரீநாத்திடம், கச்சத்தீவு மீட்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஆங்கிலத்தில் பலமுறை ‘நோ கமெண்ட்ஸ்’

(No Comments) என்று பதில் கூறாமல் தவிர்த்து விட்டு சென்றுள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் ஆகியோர் திருவான்மியூர் குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மீனவ மக்களின் தேவைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மீனவ மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், அவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஸ்ரீநாத் கேட்டறிந்தார். தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாகை சூடிய ஸ்ரீநாத், முதலமைச்சர் விஜய்யின் நண்பராக அறியப்படுகிறார்.

எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே, மீனவ மக்களின் குரலாக தேர்தல் களத்தில் பாவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது அதிரடி ஆய்வுகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில், திருவான்மியூர் பகுதியில் உள்ள மீனவ மக்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த அவரிடம், ‘கச்சத்தீவு மீட்பு’ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பலமுறை ‘நோ கமெண்ட்ஸ்’

என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதாவது, கச்சத்தீவு மீட்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘கருத்து இல்லை’ என்று பதிலளித்து விட்டு மீன்வளத்துறை அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, திருவான்மியூர் மக்களை சந்தித்தது தொடர்பாக பேசிய அவர், “மக்கள் அடிப்படை பிரச்சினைகளை தெரிவித்தார்கள். அதனை குறிப்பெடுத்துக் கொண்டோம். முதலமைச்சரிடம் இதை கொண்டு சேர்ப்போம்.

பட்டா பிரச்சினை, சாலை வசதி, தெரு விளக்கு போன்ற பிரச்சினைகளை தெரிவித்தார்கள். ஒரு வாரத்தில் ரிப்போர்ட் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை சரி செய்ய இரண்டு முதல் மூன்று மாதங்களாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும், முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகள் உரிய காலத்தில் நிறைவேற்றுவார் என்று இரு அமைச்சர்களும் உறுதி அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்கள் பட்டா விவகாரம் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் பகுதியில் வருவதால், அதில் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது,

மீனவர்களுக்கு என்று சிறப்பு சலுகை உள்ளது. அதன்படி அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றித்தர மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றனர்.

அமைச்சர் குமாரிடம், “பட்டா பிரச்சினை திருவான்மியூர் குப்பம் தொகுதியில் அதிகமாக இருக்கிறதே?என்று கேட்டதற்கு, அவரும் அந்த கேள்விக்கு ‘கருத்து இல்லை’

(No comments) என்று பதிலளிக்காமல் சென்றார்.

தமிழ்நாடு மீனவர்களின் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படும், ‘கச்சத்தீவு’ தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தின் கருத்து, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN