விஜய் முதலில் வேலை செய்யட்டும், மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் நன்றாக செய்யட்டும்— மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி
சென்னை, 26 மே (ஹி.ச.) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, CJP விவகாரத்தில் வெளிநாட்டு சதி இருந்தால் அது முறியடிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் கட
Suresh


சென்னை, 26 மே (ஹி.ச.)

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, CJP விவகாரத்தில் வெளிநாட்டு சதி இருந்தால் அது முறியடிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,

பிரதமர் மோடி தலைமையில் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் கட்டமைப்பு பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

பெட்ரோல் விலை கட்டுக்குள் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,

விஜய் முதலில் வேலை செய்யட்டும். மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். நன்றாக செய்யட்டும். கேரளாவிற்கும் வந்தால் வரட்டும் என்று கூறினார்.

ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து,

ரஜினி அவரது முடிவை எடுப்பார்.

அவரது இதயத்தை நான் நோண்டி பார்க்க முடியாது. அவர் வந்தால் தமிழ் மக்களுக்கும் உலகத்திற்கும் பயன்படட்டும் என்றார்.

மேலும், இலவசம் கொடுத்து மக்களை கெடுத்துக் கொள்ள கூடாது என்றும், பாஜக தமிழ்நாட்டில் வளரவில்லை என்பது இயற்கையான நடைமுறை என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ