Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் நிலவும் வெப்ப நிலை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை பெறப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக முதலமைச்சரை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ