முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் - பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி, 27 மே (ஹி.ச.) இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவராக திகழ்ந்த ஜவஹர்லால் நேரு, 1947-ல் சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பேற்று 16 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்தார். 1964 மே 27 அன்று மாரடைப்பால் அவர் காலமான
Former Prime Minister Nehru's Death Anniversary


புதுடெல்லி, 27 மே (ஹி.ச.)

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவராக திகழ்ந்த ஜவஹர்லால் நேரு, 1947-ல் சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பேற்று 16 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்தார்.

1964 மே 27 அன்று மாரடைப்பால் அவர் காலமானார்.

நவீன இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியதோடு, அணிசேரா இயக்கத்தை முன்னெடுத்தவர் என்ற பெருமைக்குரிய நேரு, சாச்சா நேரு என அன்புடன் அழைக்கப்படுகிறார்.

அவரது பிறந்த நாளான நவம்பர் 14 ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 62-வது நினைவு நாளையொட்டி, இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சி பேதமின்றி தலைவர்கள் பலரும் இந்த நாளில் நேருவுக்கு மரியாதை செலுத்தினர்.

இன்று காலை, புதுடெல்லியில் உள்ள சாந்திவனத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேருவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கே.சி. வேணுகோபால் மற்றும் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோரும் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b