Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச.)
தமிழக முதல்வராக, கடந்த 10ம் தேதி விஜய் பதவியேற்ற விஜய் இன்று காலை 9:30 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, மேக்கேதாட்டு அணை விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்டவை குறித்தும், தமிழகத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
இரு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிக்கிம் சென்றுள்ளதால் மே 28-ஆம் தேதி அவர் தில்லி திரும்பிய பிறகு முதல்வர் விஜய் அவரை சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா உள்ளிட்டோரையும் விஜய் சந்திக்கவுள்ளார்.
இருநாள்கள் பயணத்தை முடித்துவிட்டு, நாளை மாலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b