அண்ணாமலையார் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களுக்கு காலாவதியாகும் தேதி ஒட்டும் பணிகள் தீவிரம்
திருவண்ணாமலை, 27 மே (ஹி.ச.) இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சீ.ரமேஷ் கடந்த மே 24-ம் தேதி திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் கோயிலில் ஆய்வு செய்தார். அப்போது, கோயில் பிரசாத விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்ப
அண்ணாமலையார் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களுக்கு காலாவதியாகும் தேதி ஒட்டும் பணிகள் தீவிரம்


திருவண்ணாமலை, 27 மே (ஹி.ச.)

இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சீ.ரமேஷ் கடந்த மே 24-ம் தேதி திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் கோயிலில் ஆய்வு செய்தார்.

அப்போது, கோயில் பிரசாத விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிரசாதங்கள் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா?, உணவு பொருட்களின்

தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாக என ஆய்வு செய்தார்.

அப்போது, தேதி குறிப்பிடா மல் விற்பனை செய்வதை கண்டறிந்த அமைச்சர் உடனடியாக தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாமல் கோயில்களில் பிரசாதங்கள், உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.

திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் (RO Unit) குடிநீரின் TDS அளவை கணக்கீடு செய்து, அது குறைவாக இருந்ததை கண்டறிந்து, அதில் இயற்கை கனிமச் சத்துக்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருக்கக்கூடும் என்பதால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியினை தொடர்ச்சியான கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்ளவும், அதற்கென தனியாக பதிவேடுகளை பராமரிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பக்தர் களுக்கு விற்பனை செய்யப் படும் பிரசாதங்களின் பாக் கெட்டுகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி ஆகும் தேதி அச்சிட்டு ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை கோயிலில் விற்பனை செய்யப்பட்டு வந்த பிரசாதங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b