Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 28 மே (ஹி.ச.)
முன்னாள் முதலமைச்சரும், தெலுங்குதேசம் கட்சி நிறுவியவருமான நந்தமூரி தாரக ராமாராவ் (என்.டி.ஆர்.) பிறந்தநாளை முன்னிட்டு, ஜனசேனா கட்சி தலைவர் மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
திரைப்பட உலகில் சிறந்த நடிகராக மக்களின் ஆதரவை பெற்ற பின்னர் அரசியலுக்கு வந்து, பொதுமக்கள் நலனுக்காக செயல்பட்ட மகத்தான தலைவராக என்.டி.ஆர். விளங்கியதாக பவன் கல்யாண் புகழாரம் சூட்டினார்.
ஒற்றை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது என்.டி.ஆர். செய்த சேவைகள் மறக்க முடியாதவை என்றும், ஏழை மக்களின் பசியை போக்க ‘ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு’ வழங்கிய திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், என்.டி.ஆர். காட்டிய அதே சிந்தனையிலேயே தற்போதைய கூட்டணி அரசு திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், ஏழை மக்களின் நலனுக்காக அவரது இலட்சியங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறோம் என்றும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
என்.டி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுக்கு மரியாதை செலுத்திய பவன் கல்யாண், பொதுசேவையில் அவர் காட்டிய பாதை அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளது என்றும் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA