Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 31ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தே.மு.தி.க. தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலளர் பிரேமலதா விஜயகாந்த், MLA.. அவர்களின் தலைமையில் வரும் 31.05.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெற உள்ளது.
அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறால் இந்த முக்கிய ஆலோனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b