மகா காலேஸ்வரர் கோயிலில் மகாராஷ்டிர அமைச்சர் யோகேஷ் கடம் சிறப்பு வழிபாடு
உஜ்ஜயினி, 28 மே (ஹி.ச.) மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மகாகாலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலையில் நந்தி மண்டபத்தில் இருந்து ஜோதிர்லிங்க ஸ்ரீ மகாகாலேஸ்வரரின் பஸ்ம ஆரத்தி நடைபெற்றது. விக்ரம் சம்வத் 2083 புருஷோத்தம மாஸத்தின் சுக்ல பக்ஷத்
Maharashtra Minister Yogesh Kadam Offers Special Prayers at Maha Kaleshwar Temple


உஜ்ஜயினி, 28 மே (ஹி.ச.)

மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மகாகாலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலையில் நந்தி மண்டபத்தில் இருந்து ஜோதிர்லிங்க ஸ்ரீ மகாகாலேஸ்வரரின் பஸ்ம ஆரத்தி நடைபெற்றது.

விக்ரம் சம்வத் 2083 புருஷோத்தம மாஸத்தின் சுக்ல பக்ஷத்தில் இந்த வழிபாடு நடைபெற்றது.

பிரம்ம முகூர்த்த பஸ்ம ஆரத்தியின்போது, பால், தயிர், நெய், தேன், சர்க்கரை ஆகியவற்றால் ஆன பஞ்சாமிர்தத்தால் மகாகாலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பருவகால பழச்சாறுகள், வாசனைப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பிறகு, பாங், உலர் பழங்கள், அபீர், குலால், குங்குமம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் இறைவன் அலங்கரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் தூப தீப ஆரத்தி நடத்தினர்.

தங்கள் குடும்பம், மாநிலம் மற்றும் நாட்டின் செழிப்பிற்காகவும் நலனுக்காகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு பிரார்த்தனை செய்தனர்.

இன்று நடைபெற்ற பஸ்ம ஆரத்தியில் மகாராஷ்டிர உள்துறை இணை அமைச்சர் யோகேஷ் கடம் கலந்துகொண்டார்.

ஆரத்திக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கடம்,

இன்று முதன்முறையாக மகாகால் மகாராஜின் சன்னிதியில் இருக்கும் பாக்கியம் கிடைத்தது. இந்தியாவில் தற்போது ஆட்சியில் உள்ள ஹிந்துத்துவ சார்பு அரசு தொடர்ந்து செழிக்க வேண்டும் என ஒரே ஒரு பிரார்த்தனையை மட்டும் செய்தேன். ஹிந்துத்துவம் முன்னேற வேண்டும் என வேண்டிக்கொண்டேன்.

மகாராஷ்டிர அமைச்சராக நாங்கள் மேற்கொண்டுவரும் வளர்ச்சிப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, இறைவன் எங்களுக்கு வலிமையும் ஞானமும் அருள வேண்டும் என பிரார்த்தித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b