Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 28 மே (ஹி.ச.)
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வரும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தனியார் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 5-ம் தேதிகளில் திறப்பதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளித்திறப்பை மாணவர் நலன் கருதி தள்ளி வைக்க திமுக, அதிமுக, மாணவர் அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதோடு, தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதிக்கு பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா என முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதிக்கு பள்ளிகள் திறக்கப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b