சென்னை வெளிவட்ட சாலையில் சுங்கக் கட்டணம் உயர்வு - ஜூன் 1 முதல் அமல்
சென்னை, 28 மே (ஹி.ச.) சென்னை வெளிவட்ட சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ஜூன் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான 94 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலையில், புதிய கட்டண விகிதங
Toll Fee Hike on Chennai Outer Ring Road


சென்னை, 28 மே (ஹி.ச.)

சென்னை வெளிவட்ட சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ஜூன் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான 94 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலையில், புதிய கட்டண விகிதங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

புதிய கட்டண விவரப்படி, கார்கள் மற்றும் இதர இலகுரக வாகனங்கள் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை முழுமையாக பயணிக்க 140 ரூபாய் செலுத்த வேண்டும்.

அதேபோல், இலகுரக சரக்கு மற்றும் வணிக வாகனங்களுக்கு இந்த வழித்தடத்தில் சுங்கக் கட்டணம் 230 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும் முறை பின்பற்றப்படுவதால், குறைந்தபட்சமாக 20 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 140 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், உத்தண்டி சுங்கச்சாவடியில் கார்கள், இலகுரக வணிக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனினும், பேருந்துகள் மற்றும் இரண்டு அச்சு கொண்ட கனரக சரக்கு வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தற்போதைய 165 ரூபாயில் இருந்து 170 ரூபாயாக 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் கட்டண மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த உயர்வு அமல்படுத்தப்படுவதாக சாலை மேம்பாட்டு நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்டண உயர்வு காரணமாக தினசரி பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துத் துறையினர் சற்று கூடுதல் சுமையை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b