Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 மே (ஹி.ச)
சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1883ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பிறந்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளரான இவர், ‘இந்துத்துவா’ என்ற சொல்லை உருவாக்கியவர் என்று பரவலாக அறியப்படுகிறார்.
சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளான இன்று,( மே 28, 2026 )பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,
வீர சாவர்க்கர் ஜெயந்தியை முன்னிட்டு அவரை நினைவுகூர்கிறேன். அவரது தைரியமும் தேசப்பற்றும் எப்போதும் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். அவரது அறிவுக்கூர்மையும் சமூக சீர்திருத்தத்தில் அவர் கொண்டிருந்த அழுத்தமும் குறிப்பிடத்தக்கவை
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வையொட்டி பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்கள் பலரும் சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b