அதி வேக லாரி விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி!
மதுரை, 29 மே (ஹி.ச.) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி பகுதியில், கனிம வளம் ஏற்றி வந்த அதிவேக லாரி இருசக்கர வாகனத்தின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய அதிர்ச்சிக் கொள்ளாக்கியது. விபத்து நடந்த இடத்தில் இருந்த பெட்ரோல் பங்க் CCTV-ய
க


மதுரை, 29 மே (ஹி.ச.)

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி பகுதியில், கனிம வளம் ஏற்றி வந்த அதிவேக லாரி இருசக்கர வாகனத்தின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய அதிர்ச்சிக் கொள்ளாக்கியது.

விபத்து நடந்த இடத்தில் இருந்த பெட்ரோல் பங்க் CCTV-யில் பதிவாகியுள்ள நெஞ்சை பதற வைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனம் முழுமையாக நசுங்கிய நிலையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், குவாரி அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

முக்கியமாக இந்த பகுதிகளில் அதிக அளவு கனிம வள கொள்ளை நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில் கனிம வளத்தை ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.

Hindusthan Samachar / Durai.J