Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.)
தென்னை சாகுபடியில் அதிக மகசூல் மற்றும் லாபம் பெற, சரியான மண் தேர்வு, தரமான கன்றுகள், முறையான இடைவெளி, தேவையான உரமிடல் மற்றும் பூச்சி மேலாண்மை ஆகியவை மிக முக்கியமாகும்.
அறிவியல் பூர்வமான முறைகளைக் கையாள்வதன் மூலம் தென்னையிலிருந்து நிலையான வருமானத்தைப் பெறலாம்
தென்னை ரகங்கள் பொதுவாக நெட்டை, குட்டை மற்றும் வீரிய ஒட்டு (Hybrid) என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன
- நெட்டை ரகங்கள்: வீம்பார், மேற்கு கடற்கரை நெட்டை.
- குட்டை ரகங்கள்: சவூதி குட்டை, மலேசியன் ஆரஞ்சு.
- வீரிய ஒட்டு ரகங்கள்: குட்டை x நெட்டை (DxT) மற்றும் நெட்டை x குட்டை (TxD). இவை அதிக மகசூல் தரக்கூடியவை
- மண்: வடிகால் வசதியுள்ள செம்மண், மணல் கலந்த செம்மண் மற்றும் வண்டல் மண் தென்னை வளர்ப்பிற்கு மிகவும் உகந்தது.
-
- நடவு பருவம்: செம்மண் நிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையும், தாழ்வான நிலங்களில் அக்டோபர் மாதத்திற்குப் பிறகும் நடவு செய்வது சிறந்தது.
- நீர்ப்பாசனம் மற்றும் ஈரப்பதம்தென்னை கன்றுகளுக்கு முதல் 2 வருடங்களுக்குக் கோடைக்காலங்களில் நிழல் அமைத்து, தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
-
- முதிர்ந்த மரங்களுக்கு வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை (மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து) நீர் பாய்ச்சுவது அவசியம்.நீர் சேமிப்பு மற்றும் களைகளைக் கட்டுப்படுத்த தென்னை மட்டைகளை மரத்தைச் சுற்றி குழிகளில் புதைக்கலாம்
- உரமிடுதல்:ஒவ்வொரு மரத்திற்கும் ஆண்டுதோறும் தொழுஉரம் அல்லது மக்கிய எரு 50 கிலோ இட வேண்டும்.
- கன்று நட்ட 3-வது ஆண்டிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரங்களை (யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்) இரண்டு தவணைகளாக (ஜூன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி) வேரிலிருந்து 2 மீட்டர் தூரத்தில் வட்டப்பாத்தி எடுத்து இட வேண்டும்.ஊடுபயிர் சாகுபடிதென்னை மரங்கள் வளரும் ஆரம்ப காலங்களில் (முதல் 5-7 ஆண்டுகள் வரை) நிழல் அதிகமாக இல்லாததால், நிலக்கடலை, வாழை, மஞ்சள் மற்றும் காய்கறி வகைகளை ஊடுபயிராகச் சாகுபடி செய்து கூடுதல் லாபம் பெறலாம்.
மரங்கள் முதிர்ந்த பிறகு தீவனப்புல், கோகோ அல்லது மிளகு போன்றவற்றை வளர்க்கலாம்.
வேர்ப்புழுக்கள்: வேர்களைத் தின்று மரத்தை உலரச் செய்யும். கார்போபியூரான் மருந்தைப் பரிந்துரைப்படி மண்ணில் இடலாம்.
மஞ்சள் இலை நோய் மற்றும் இதர பூஞ்சைகள்: செம்பு சல்பேட் (Bordeaux mixture) அல்லது முறையான பூஞ்சைக் கொல்லிகளை வேர் மூலம் செலுத்தி நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
Hindusthan Samachar / Durai.J