Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.)
சர்வதேச அமைதி காப்போர் தினம் (International Day of United Nations Peacekeepers) ஆண்டுதோறும் மே 29 அன்று அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஐ.நா. அதிகாரப்பூர்வ தளம் மூலமாக, உலகெங்கிலும் அமைதியை நிலைநாட்டப் பாடுபடும் அமைதி காக்கும் வீரர்களின் சேவையை அங்கீகரிக்கவும், பணியின்போது இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவும் 2001 முதல் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கணக்கிட முடியாதவை.
அதனால் மற்றொரு உலக மகாயுத்தம் ஏற்படாமல், உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றது.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூறவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும் இத்தினம் மே 29ஆம் தேதி 2001ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.
முக்கியத்துவம்:
மே 29 அன்று கொண்டாடப்படும் சர்வதேச அமைதி காப்போர் தினம், உலகம் முழுவதும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரின் பங்களிப்பை நினைவுகூரும் ஒரு சிறப்பு நாளாகும்.
உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டவும், போர்களை முடிவுக்குக் கொண்டு வரவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள நாடுகளிடையே அமைதி மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்க படுகிறது.
Hindusthan Samachar / Durai.J