Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 29 மே (ஹி.ச.)
கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று முதல் அவர்கள் வழக்கம்போல் பணிக்கு திரும்புகின்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கூறுகையில்,
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை பகுதிகளில் செயல்பட்டு வரும் 74 டாஸ்மாக் கடைகளும் இன்று வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா என்ற குழப்பத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN