Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்கால், 29 மே (ஹி.ச..)
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகயிலாசநாதர் சுவாமி தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆற்றங்கரை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
இன்று அதிகாலை 06ம் கால யாகசாலை பூஜை துவங்கி மகாபூர்ணாகுதி,மகாதீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியில் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலய பிரகாரம் வலம் வந்து ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீவள்ளி,தேவசேனா சமேத சுப்ரமணியர் உள்ளிட்ட விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மூலவர் சன்னிதிகளில் மகாபிஷேகம், மகாதீபாராதனையும் நடைபெற்றது.கும்பாபிஷேகம் நீரை பக்தர்கள் மீது குழாய் மூலம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் விழாவில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஹெச்.நாஜிம், நிர்வாக அதிகாரி கோவில்கள் சுப்ரமணியன்,ஆலய நிருவாக அதிகாரி விநாயகமூர்த்தி, திருப்பணிக்குழு தலைவர் வெற்றிச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / Durai.J