சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
மதுரை, 29 மே (ஹி.ச.) மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி வருகின்ற 2ந் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. தேரோட்டத்திற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
க


மதுரை, 29 மே (ஹி.ச.)

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி வருகின்ற 2ந் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

தேரோட்டத்திற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி தேர் புறப்படும் இடத்தில் நடைபெற்றது.

முன்னதாக ஜெனகை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் பொருட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து தேர் புறப்படும் இடத்தில் முகூர்த்த கால் நடப்பட்டது கோவில் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் செயல் அலுவலர் ராஜா பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா சுபா பெருமாள் மற்றும் பணியாளர்கள் ஆச்சாரியார்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காவல்துறை சார்பில் நடைபெறும் தேரோட்டத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில்

கலந்து கொண்ட காவல் துறையினருக்கு கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது

Hindusthan Samachar / Durai.J