அமராவதி திட்டம் சந்திரபாபுவுக்கு ‘தங்க வாத்து’- காகாணி கோவர்தன் ரெட்டி கடும் குற்றச்சாட்டு
நெல்லூர் , 03 மே (ஹி.ச.) ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ‘கோடாரி கட்சி’ என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விமர்சித்ததற்கு அந்தக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் காகாணி கோவர்தன் ரெட்டி இன்று நெல்ல
A


நெல்லூர் , 03 மே (ஹி.ச.)

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ‘கோடாரி கட்சி’ என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விமர்சித்ததற்கு அந்தக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் காகாணி கோவர்தன் ரெட்டி இன்று

நெல்லூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை கோடாரி கட்சி என்று விமர்சிக்கும் சந்திரபாபு நாயுடுவே தற்போது மண்வெட்டியாக மாறி அரசின் கருவூலத்தையும், மக்களின் நலன்களையும் தோண்டி எடுத்து வருகிறார்.

அமராவதி திட்டம் சந்திரபாபு மற்றும் அவரது அணியினருக்கு ‘தங்க வாத்து’ போல மாறியுள்ளது.

ஒருபுறம் ஒப்பந்தங்கள் மூலம் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. மறுபுறம் கல்வி, மருத்துவம், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

அமராவதியில் ஒரு சதுர அடிக்கான கட்டுமான செலவாக ரூ.20 ஆயிரத்து 489 வரை செலுத்தப்படுகிறது.

ஆனால் சாதாரணமாக இதற்கு ரூ.4,500 மட்டுமே செலவாகும். தெலுங்கானா தலைமைச் செயலகம் மற்றும் நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான செலவுகளும் இதைவிட குறைவாகவே இருந்தன.

தனக்கு நெருக்கமானவர்களுக்கே மீண்டும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு, கட்டுமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டு திட்டமிட்ட முறையில் ஊழல் நடைபெற்று வருகிறது.

என்.டி.ராமராவிடமிருந்து கட்சியையும் பதவியையும் கைப்பற்றிய காலத்திலிருந்தே சந்திரபாபுவின் அரசியல் சதி மற்றும் ஊழலால் நிரம்பியுள்ளது.

தெலுங்குதேசம் கட்சியின் ‘மகாநாடு’ மாநாட்டால் மக்களிடம் எந்த தாக்கமும் ஏற்படாது.

வரவிருக்கும் தேர்தலில் மக்கள் மீண்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி அளிப்பார்கள் என்றும் காகாணி கோவர்தன் ரெட்டி தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA