Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 மே (ஹி.ச.)
வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது உணவகத் தொழிலை பாதிக்கும் நடவடிக்கையாகும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக ஹோட்டல் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கூடுதல் சுமை ஏற்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக விலையை குறைக்க வேண்டும் என்றும், எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் சீரான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் மற்றும் மாநகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ