வாக்கு எண்ணிக்கை நாளன்று ராமநாதபுரம் தேவிபட்டினம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
ராமநாதபுரம், 03 மே (ஹி.ச.) மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருப்பதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்
Ramanathapuram


ராமநாதபுரம், 03 மே (ஹி.ச.)

மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருப்பதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பரமக்குடி முதுகுளத்தூர் திருவாடானை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் அந்த வாக்கு எண்ணும் மையத்திலிருந்து இருபுறமும் 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேவிபட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோப்பேரி மடம் சோதனை சாவடி வழியாக சித்தார்கோட்டை அழகன்குளம் பனைக் குளம் வழியாக பட்டினங்காத்தான் ஈ சி ஆர் வழியாக ராமநாதபுரத்திற்கு செல்லலாம்.

அதேபோல ராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டினம் திருவாடானை காரைக்குடி திருச்சி செல்லும் வாகனங்கள் பட்டினம்காத்தான் இசிஆர் வழியாக நதிப்பாலம், பனைக்குளம், சித்தார் கோட்டை, கோப்பேரி மடம் வழியாக செல்ல வேண்டும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN